கிராமணி குல முழக்கங்கள்!

ஆன்றோர் போற்றும் சான்றோர் குலமே! கிராமணி குலத்தார் சிரோண் மணியாவர்! சான்றாண்மை மிக்கார் சான்றோர் குலத்தார்! பாதி்க்க படுவோர் – சாதிக்க எழுவர்! குனிய மறுப்பவனே குரல் கொடுப்பான்! அல்வழி சாணார்! நல்வழி சாணார்! கிராமணி குலம் முன்னேற சத்திய படையே எழுகவே! காட்சி பொருளல்ல கட்சி! ஆட்சி புரிதலே மாட்சி!

கிராமணி குல சான்றோர் சரித்திரம் பற்றி சிலம்புச்செல்வர்

தமிழகத்தின் மீது விசய நகர பேரரசு ஆதிக்கம் பெறுவதற்கு முன்பு கிராமணியும் ‘மறவர்’ (அரசர்) குலத்தவராகவே இருந்து வந்தனர். விசய நகர பேரரசு ஆந்திர வீரர்களோடு வந்து தமிழகத்தில் ஆதிக்கம் பெற்றபோது, உள் நாட்டிலிருந்த மறவர்களை அது ஒடுக்க முயன்றது. அம்மறவர்களிலே பலர் பாண்டிய நாட்டின் உட்பிரதேசங்களிலேயும் பாண்டி நாட்டுக்கு வெளியே கிராமங்களிலேயும் குடி புகுந்தனர். கிராமங்களிலே குடி புகுந்தவர்கள் “கிராமணி” என பெயர் பெற்றனர் என்று சொல்லப்படுகிறது. “கிராமணி” என்பதற்கு “கிராம மணியம்” என்று பொருள் … தொடர்ந்து வாசிக்க கிராமணி குல சான்றோர் சரித்திரம் பற்றி சிலம்புச்செல்வர்

கிராமணி குல சரித்திர நாயகர்கள்#2 – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சிவஞானம்

பிறப்பு: 1906ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் நாள், சென்னை ஆயிரம் விளக்கு. அரசியல்: உறுப்பினர், தமிழ் நாடு காரியக்கமிட்டி (1951-52) துணைச் செயலாளர், சென்னை மாவட்டக் காங்கிரசுக் கமிட்டி(1936-37) செயலாளர், சென்னை ஜில்லா காங்கிரசுக் கமிட்டி (1947-48) தொழிலாளர் இயக்கம்: செயலாளர், சென்னை கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம் (1934-38) துணைத் தலைவர், சென்னை அச்சுத் தொழிலாளர் சங்கம் (1932-34) துணைத் தலைவர், சென்னை இராயபுரம் கணேஷ் அலுமினியம் தொழிலாளர் சங்கம் (1937-38) தலைவர், சென்னை பட்டன் தொழிலாளர் … தொடர்ந்து வாசிக்க கிராமணி குல சரித்திர நாயகர்கள்#2 – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சிவஞானம்

கிராமணி குல சரித்திர நாயகர்கள்#1 – எம்.ஆர். சண்முகம் பிள்ளை கிராமணி

எம்.ஆர்.சண்முகம் பிள்ளை அவர்கள் நம் கிராமணி சமுகத்தின் முதல் பட்டதாரி.இவர் வெள்ளைத் துறவியாக நீண்ட நாள் வாழ்ந்து,சுமார் அறுபது வயதளவில் காலமானார்.தமிழில் நிறைந்த புலமை பெற்றிருந்தார்.அந்நாளில், ஆங்கிலத்தின் மூலம் படடித்தப் பி.ஏ. பட்டம் பெற்ற ஓருவர் தமிழிலும் நிறைந்த புலமை பெறுவது அரிது. எம்.ஆர்.சண்முகம் பிள்ளை அவர்கள் யோக சாதனங்களை பயின்று வைத்திருந்தார்.அவர் ஹடயோகத்திலிருந்த போது அவருடைய உடலிலிருந்து கால்வேறு கைவேராகப் பிரிந்திருக்கக் கண்டு,அவரது தந்தையார் அலறி அழுதுவிட்டாராம்.பின்னர்த்தான் தன் மகன் செய்த ஹடயாகத்தின் விளைவு அது … தொடர்ந்து வாசிக்க கிராமணி குல சரித்திர நாயகர்கள்#1 – எம்.ஆர். சண்முகம் பிள்ளை கிராமணி