சட்டமறுப்புப் போர் – சிலம்புச் செல்வர் ம.பொ.சி

காந்தி-இர்வின் ஒப்பந்தக் காலத்திலே நாடு முழுவ திலுமிருந்து காங்கிரஸ்காரர்கள் ஆக்கவழிப்பட்ட வேலை களில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்நியத் துணிக்கடை மறியல் காந்தி-இர்வின் ஒப்பந்தப்படி அனுமதிக்கப்படவில்லை. கள்ளுக்கடை மறியலும் இரண்டு மாதத்துக்குமேல் நீடிக்க வில்லை. ஆகவே, தீண்டாமை விலக்கு, கதர் விற்பனை ஆகிய வற்றிலே காங்கிரஸ்காரர்களை ஈடுபடுத்தியது காங்கிரஸ் மகாசபை. பாரதமாதா வழிபாடு பிரதி ஞாயிறுதோறும் நான் வாழ்ந்த வண்ணாரப் பேட்டையில் உள்ள தொண்டர்களைக் கூட்டி ஊர்வலம் நடத்தினேன். காந்தியடிகள் உருவப் படமோ, பாரதமாதா எனப்படும் கற்பனைத் தெய்வத்தின் உருவப்படமோ … தொடர்ந்து வாசிக்க சட்டமறுப்புப் போர் – சிலம்புச் செல்வர் ம.பொ.சி

சேரி வாழ்க்கை-சிலம்புச் செல்வர் ம.பொ.சி

சேணியம்மன் கோயில் கூட்டத்திற்குப் பின்னர் சாதியார் மத்தியிலே என் குடும்பம் குடியிருப்பது இயலாததாகி விட்டது. வேறு சாதியார் மத்தியிலே குடியிருக்கலா மென்றால், என் சாதியைப்பற்றிப் பிற சாதியினர் கொண்டிருந்த இழிவு மனப்பான்மை காரணமாக அவர்கள் மத்தியிலே குடியிருக்க வீடு கிடைப்பதில்லை. இப்படி அல்லல்பட்டதன் விளைவாக, ஒரு சேரியில் பாழடைந்து கிடந்த குடிசை ஒன்றைத் தேடிப்பிடித்து அதிலே என் குடும்பத்தைக் குடியேற்றினேன். அதன் பெயர் தங்கவேல் பிள்ளை சேரி என்பதாகும். உண்மையில் என் பெற்றோர் சேரியில் குடியேறச் சம்மதித்தது … தொடர்ந்து வாசிக்க சேரி வாழ்க்கை-சிலம்புச் செல்வர் ம.பொ.சி

வர்க்கப் போர்-சிலம்புச் செல்வர் ம.பொ.சி

என் முதல் மனைவி இறந்த 3 மாத காலத்திற்குள் டாக்டர் பி. வரதராசுலு நாயுடு நடத்திய “தமிழ்நாடு” நாளிதழ் அச்சகத்தில் அச்சுக்கோக்கும் தொழிலாளியாக அமர்ந்தேன்.“தமிழ்நாடு” நாளிதழோடு இதற்கு முன்பே எனக்குத் தொடர்பு ஏற்பட்டதுண்டு. அது மிகவும் சுவையான நிகழ்ச்சி. “விநோதினி” மாத இதழ் அச்சகத்திலே நான் வேலை பார்த்துவந்தபோது, அச்சக உரிமையாளர்களான சர்மா சகோதரர்கள், என்னையும் இன்னும் சில அச்சுக் கோக்கும் தொழிலாளர்களையும் “தமிழ்நாடு” அச்சகத்திற்கு ஒருநாள் அனுப்பிவைத்தனர். ஏதோ ஒரு அவசர வேலை காரணமாக அதிக … தொடர்ந்து வாசிக்க வர்க்கப் போர்-சிலம்புச் செல்வர் ம.பொ.சி

உப்புச் சத்தியாகிரகம் சட்டமறுப்பாக மாறியது- சிலம்புச் செல்வர் ம.பொ.சி

உப்புச் சத்தியாகிரகம் சட்டமறுப்பாக மாறிய பின்னர், சென்னை சூனஸ் சேட் கடைமுன் நடந்த மறியலில் நானும் கலந்துகொண்டேன். பிரபல பத்திரிகாசிரியர் காசா சுப்பாராவ, ஓ.பி. இராமசாமி ஆகிய ஆந்திர பிரமுகர்கள் தலைமையிலே மறியல் நடந்த நாளில்தான் நானும் கலந்து கொண்டேன். அந்த நாள் என்னால் மறக்க இயலாததாகும். மறியல் செய்யும் தொண்டர்களைப் போலீசார் தடியா லடிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், அன்று அடித்து நொறுக்கினாற்போல், அதற்கு முன்பு நிகழ்ந்ததில்லை. மறியலுக்குத் தலைமை தாங்கிய ஆந்திரப் பிரமுகர்கள் தடியடிக்குப் … தொடர்ந்து வாசிக்க உப்புச் சத்தியாகிரகம் சட்டமறுப்பாக மாறியது- சிலம்புச் செல்வர் ம.பொ.சி