ஒரு ரூபாய் அபராதம்- சிலம்புச் செல்வர் ம.பொ.சி

வழக்கம்போல ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தி,போலீசார் எங்களைக் கைது செய்தனர். இந்தமுறை ஒரு புதிய அனுபவம்-அதாவது, கடந்த முறைகளைப் போலல்லாமல், இந்த முறை என்மீது, வழக்குத் தொடரப்பட்டது.போலீசாரிடம் முன் அனுமதி பெறாமல் சட்டத்தை மீறி நடத்தப்பெற்ற ஊர்வலத்தில் தலைமை தாங்கிச் சென்றதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டது. நான் குற்றத்தை ஒப்புக் கொண்டேன். வழக்கை விசாரித்த சென்னை நான்காவது பிரதம மாகாண மாஜிஸ்திரேட், ஒரு ரூபாய் அபராதம் விதித்து, அதனைக் கட்டத்தவறினால் மூன்று மணி நேரம் கோர்ட் காவலில் … தொடர்ந்து வாசிக்க ஒரு ரூபாய் அபராதம்- சிலம்புச் செல்வர் ம.பொ.சி

அதிகாரியின் கைவரிசை – சிலம்புச் செல்வர் ம.பொ.சி

நீண்டகாலச் சிறைவாசந்தான் எனக்கு இருந்த தேசபக்த வெறியைத் தணிக்கும்போல் இருந்தது. ஆகவே, 26.7.1932ல் சென்னை ஏழுகிணறு வட்டத்தில்-அங்குள்ள ஆஞ்சநேயர் கோயில் முன்புள்ள திடலில் சட்டத்தை மீறி நடைபெற்ற சென்னை ஜில்லா அரசியல் மாநாட்டிலே தண்டையார்பேட்டை காங்கிரஸ் கமிட்டியின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு கைதியானேன். மாநாடு நடந்த திடலிலேயே என்னைக் கைது செய்தபோதே போலீசார் தங்கள் கைவரிசையை என்னிடம் காட்டினர். காவலர்கள் அல்ல; உயர்தர அதிகாரிகள்! அவர்களிடம் அடிபட்டதால் என் மனத்துள் ஒரு பெருமிதம் ஏற்பட்டது. ஆம், அப்பாவித் … தொடர்ந்து வாசிக்க அதிகாரியின் கைவரிசை – சிலம்புச் செல்வர் ம.பொ.சி