“சிவஞானக் கனி” ம.பொ.சி- கவியோகி சுத்தானந்த பாரதியார்

செந்தமிழி லேகனிந்த சிவஞானக் கனியே! செவிக்கின்ற மாய்வளரும் கவிக்கின்ப கனியே! நந்தமிழர் தலைநிமிர்ந்து நடக்கலஞ் சிறக்க நாதச்சி லம்பொலிக்க நர்த்தனஞ்செய் வாக்கே! சிந்தையுடன் செயல்வீறும் சேர்ந்தவினைத் திட்பம் தகழுதிருத் தணிவேலன் மகிழவரும் அன்பே! செந்தேனும் வாழியநீ தமிழரசுக் கொடியைத் தாங்கியிசை யோங்கியிசை யோங்கிச்சிவ சக்தியரு ளாலே!

அஞ்சக்கரனருளினுன்- ம.பொ.சி பற்றி கிருபானந்த வாரியார்:

அமிழ்தத் தமிழ்மாரி அன்புடனே பெய்யும் தமிழரசு மன்றத் தலைவர்-அமையுந் சிவஞான வேந்தாகி யார் சிலம்புச் செல்வர் சிவஞானம் வாழ்த்துக்கள் சிறந்து. அஞ்சாத நெஞ்சம் அரியகலைப் பண்பும் மஞ்சார் மலையன்ன மாண்புருவும்-எஞ்சாத் சிவஞானம் தந்த தமிழரசுக் கோமான் சிவஞானம் வாழ்கச் சிறந்து. உள்ளமிகத் தூயவன் உண்மை உயர்வு பெற வெள்ளப் பெருக்காய் விரிவுரைசெய்-வள்ளல் சிவஞானச் செம்மல் திருவுடனே வாழி சிவஞானச் செல்வம் தழைத்து. நல்ல கருத்துரைகள் நாளும் நவநவமாய் எல்லாரும் கேட்க இயம்புதற்கு-வல்லவன் சொல்லாண்டு பேசும் துணிவன் சிவஞானம் … தொடர்ந்து வாசிக்க அஞ்சக்கரனருளினுன்- ம.பொ.சி பற்றி கிருபானந்த வாரியார்:

வாய்மைத்தொண்டு – ம.பொ.சி பற்றி டாக்டர் மு.வ:

தக்க சிலம்பின் காவியத்தை தந்த இளங்கோ பெரும்புலவர் செக்கை அழுத்திக் சிதம்பரனார் கீர்த்தி பெருகு கட்டபொம்மன் இக்கா லத்தின் உயர்ஞானி இரக்க வடிவின் இராமலிங்கர் மிக்கோ இவர்தம் புகழ்பரப்பும் மேன்மை திகழும் ம.பொ.சி. தாயின் அருளால் கற்றமொழி தன்னுல் பயின்றே உயர்கல்வி ஆயும் துறைகள் அறிவியல்கள் அனைவரும் வளர்த்தல் இயற்கையிது ஏய முறையென் றுணராமல் ஏங்கும் இந்த நாட்டினர்க்குத் தூய்மை நெறியைத் துணிந்துணர்த்தும் தீரன் அறிஞன் ம.பொ.சி. தயங்கும் நாட்டைத் தயங்காமல் தட்டி எழுப்பும் தெளிவுடையோன் மயங்கா … தொடர்ந்து வாசிக்க வாய்மைத்தொண்டு – ம.பொ.சி பற்றி டாக்டர் மு.வ: