ஒரு ரூபாய் அபராதம்- சிலம்புச் செல்வர் ம.பொ.சி

வழக்கம்போல ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தி,போலீசார் எங்களைக் கைது செய்தனர். இந்தமுறை ஒரு புதிய அனுபவம்-அதாவது, கடந்த முறைகளைப் போலல்லாமல், இந்த முறை என்மீது, வழக்குத் தொடரப்பட்டது.போலீசாரிடம் முன் அனுமதி பெறாமல் சட்டத்தை மீறி நடத்தப்பெற்ற ஊர்வலத்தில் தலைமை தாங்கிச் சென்றதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டது. நான் குற்றத்தை ஒப்புக் கொண்டேன். வழக்கை விசாரித்த சென்னை நான்காவது பிரதம மாகாண மாஜிஸ்திரேட், ஒரு ரூபாய் அபராதம் விதித்து, அதனைக் கட்டத்தவறினால் மூன்று மணி நேரம் கோர்ட் காவலில் … தொடர்ந்து வாசிக்க ஒரு ரூபாய் அபராதம்- சிலம்புச் செல்வர் ம.பொ.சி

அதிகாரியின் கைவரிசை – சிலம்புச் செல்வர் ம.பொ.சி

நீண்டகாலச் சிறைவாசந்தான் எனக்கு இருந்த தேசபக்த வெறியைத் தணிக்கும்போல் இருந்தது. ஆகவே, 26.7.1932ல் சென்னை ஏழுகிணறு வட்டத்தில்-அங்குள்ள ஆஞ்சநேயர் கோயில் முன்புள்ள திடலில் சட்டத்தை மீறி நடைபெற்ற சென்னை ஜில்லா அரசியல் மாநாட்டிலே தண்டையார்பேட்டை காங்கிரஸ் கமிட்டியின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு கைதியானேன். மாநாடு நடந்த திடலிலேயே என்னைக் கைது செய்தபோதே போலீசார் தங்கள் கைவரிசையை என்னிடம் காட்டினர். காவலர்கள் அல்ல; உயர்தர அதிகாரிகள்! அவர்களிடம் அடிபட்டதால் என் மனத்துள் ஒரு பெருமிதம் ஏற்பட்டது. ஆம், அப்பாவித் … தொடர்ந்து வாசிக்க அதிகாரியின் கைவரிசை – சிலம்புச் செல்வர் ம.பொ.சி

கண்ணாம்பூச்சி விளையாட்டு-சிலம்புச் செல்வர் ம.பொ.சி

போலீஸ் காவலிலிருந்து விடுதலை பெற்ற நான்கு மாதங்களுக்குள்-அதாவது, 15.5.1932ல் ஏற்கெனவே என்மீது விதிக்கப்பட்டிருந்த 144 தடை யுத்தரவை மீறி வண்ணாரப் பேட்டையில் ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கி நடத்திச் சென்றேன். ஒரு தேசபக்த சகோதரியும் வேறு சில தொண்டர்களும் அந்த ஊர்வலத்தில் என்னுடன் கலந்து கொண்டனர்.அப்பொழுதெல்லாம் சட்டத்தை மீறியும், சட்டத்திற்குட்பட்டும் நடைபெறும் ஊர்வலங்களிலே நான் பாடிச் செல்வதுண்டு. பாரதியாரின் பாடல்களைத்தான் பாடுவேன்.தேசபக்த உணர்ச்சிக்கே முதன்மை தரப்பட்ட காலமாதலால் என் ‘சங்கீதக் கொலை’யை யாரும் பொருட்படுத்துவதில்லை.அதனால், நான் துணிவோடு பாடுவேன். … தொடர்ந்து வாசிக்க கண்ணாம்பூச்சி விளையாட்டு-சிலம்புச் செல்வர் ம.பொ.சி

கைதியானேன் -சிலம்புச் செல்வர் ம.பொ.சி

இந்த நோட்டீசானது பிரசித்திபெற்ற 144 செக்ஷன்படி சென்னை போலீஸ் கமிஷனரால் எனக்கெதிராகப் பிறப்பிக்கப்பட்டது. அந்த நாளில் பெரிய தலைவர்களுக்குத்தான் இந்த மாதிரி தடையுத்தரவு பிறப்பிப்பதுண்டு. ஆகவே, அப்போதைய சென்னை மாநில அரசும், சென்னை நகர போலீசும் எனக்குத் தடைவிதித்து என்னைப் பெருமைப்படுத்தியது எனக்கே வியப்பைத் தந்தது. சப்-இன்ஸ்பெக்டர் பேசிய அதிகாரத் தோரணையும், தடை உத்தரவில் காணப்பட்ட அன்னிய அரசின் ஆணவமான வாசகங்களும் என்னுடைய தன்மானத்தை இழிவுபடுத்துவனவாக இருந்தன. இந்த நிகழ்ச்சியின் போது என் வீட்டுக்கெதிரே குழுமியிருந்த ஏராளமான … தொடர்ந்து வாசிக்க கைதியானேன் -சிலம்புச் செல்வர் ம.பொ.சி